education

img

நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை....  சென்னை ஐஐடி முதலிடம்

சென்னை
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் ஆண்டுதோறும் நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை வெளியிடப்படுவது வழக்கம். நடப்பாண்டில் இந்த தரவரிசையில் இடம்பிடிப்பதற்காக மொத்தம் 5805 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டார்.

அதன்படி நாட்டின் சிறந்த கல்வி நிறுவனமாக தமிழகத்தில் இயங்கும் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து அசத்தியது. பெங்களூரு ஐஐஎஸ்சி 2-வது இடத்தையும், தில்லி ஐஐடி 3-ஆம் இடத்தையும் பிடித்துள்ளன.

சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடத்தை பிடித்தையும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தையும் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.  

;